சேலம்:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அப்பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
மேலும், பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய மூவரும் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், அவர்கள் ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்திருந்தது.
ஜாமீனில் வெளியில் வந்த பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரைக்கும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் உத்தரவில் தெரிவித்திருந்தது.
கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கு - பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீனில் வெளியில் வந்தனர் இதையடுத்து 5 பேரும் இன்று (ஆக. 31) காலை ஜாமீனில் வெளியில் வந்தனர். இவர்களை பள்ளியில் இருந்து வந்திருந்த மற்ற ஆசிரியர்கள் கார்களில் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:செல்போன் கேம் மோகம் பள்ளி மாணவன் தற்கொலை