தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் முதல்முறையாக எலும்பு மஜ்ஜை  அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனை சாதனை

By

Published : Sep 15, 2019, 1:53 PM IST

சேலம்: புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துமனை மருத்துவர்கள் எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

salem-private-hospital

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை அறுவை சிகிச்சை செய்து மாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளர்.

இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறும்பொழுது, "சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துமனை மருத்துவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்தப் புற்றுநோய் பாதிப்பு, 33 விழுக்காடு புகையிலை, அதன் சார்ந்த பொருட்களால் வருகிறது. 20 விழுக்காடு உடல் எடை அதிகரிப்பால் வருகிறது. இதில் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே உணவு பழக்கவழக்கங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details