தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காலத்தில் முதல் உறுப்பு தானம்! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: கரோனா காலத்தில் காவிரி மருத்துவமனையில் முதல் முறையாக உறுப்பு தானம் செய்யப்பட்டது.

கரோனா காலத்தில் முதல் உறுப்பு தானம்
கரோனா காலத்தில் முதல் உறுப்பு தானம்

By

Published : Jun 20, 2021, 10:42 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 27 வயது இளைஞர் ஜுன்.18 ஆம் தேதி உயிரிழந்தார். இறந்தவரின் குடும்பம் அவரது உறுப்பு, திசு தானத்திற்கு முன்வந்தது. இந்நிலையில் இன்று (ஜுன்.20) சேலம் மாவட்டம் காவேரி மருத்துவமனையில் முதல் முறையாக உறுப்பு தானம் செய்யப்பட்டது.

காவிரி மருத்துவமனை இயக்குநர் செல்வம் கூறும்போது, "குடும்பத்தில் ஒரு இளைஞனை இழப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பாதிக்கப்பட்டவர் சாலை விபத்தில் காயமடைந்தார்.

இருப்பினும், இறந்த நபரின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ஒரு நன்கொடையாளர் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும், மேலும் இந்த குறிப்பிட்ட உறுப்பு நன்கொடை மூலம் தகுதியான எட்டு பேருக்கு வழங்க முடிந்தது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் இறந்தவரின் உறுப்புகளை வெற்றிகரமாக அறுவடை செய்ய முடிந்தது" என்றார்.

காவிரி மருத்துவமனை நிறுவனர் மணிவண்ணன் செல்வராஜ் கூறும்போது, "இந்த நன்கொடை செய்ய முன்வந்த நன்கொடையாளர் குடும்பத்தின் உன்னத செயலை நாங்கள் மதிக்கிறோம். மேலும் அவர்களுக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெளிப்படையான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்ததற்காக தமிழ்நாடு மாற்று ஆணையத்திற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதனால், எங்களைப் போன்ற மருத்துவமனைக்கு உறுப்பு தானம் செய்ய திறம்பட உதவுகிறது" என்றார்.

இதையும் படிங்க:’அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்’ - தமிழிசை உறுதி

ABOUT THE AUTHOR

...view details