தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடையில் சிக்கிய பசுமாடு : பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு - salem pillayar nagar

சேலம் : சாக்கடை கால்வாயில் சிக்கிய பசுமாட்டை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பாதாள சாக்கடையில் சிக்கிய பசுமாடு
பாதாள சாக்கடையில் சிக்கிய பசுமாடு

By

Published : Nov 28, 2020, 10:01 AM IST

சேலம் பிள்ளையார் நகர் பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த பசுமாடு சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பசுமாட்டை மீட்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது. எனவே இதுதொடர்பாக, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அலுவலர் கலைசெல்வன் தலைமையிலான நான்கு தீயணைப்பு வீரர்கள், எட்டு அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் சிக்கியிருந்த பசுமாட்டை கயிறு கட்சி பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டையும், வரவேற்பையும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளனவா? ஓர் கள ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details