கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனம்சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில்தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த அலுவலகம் அருகில் பேருந்துகள் பழுது பார்க்கும் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்து எரித்த போது, எதிர்பாராதவிதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சொகுசுப் பேருந்தில் தீ பரவி முழுவதும் மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.
இத்தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர், சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியே பெரும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. மேலும் புதிய பேருந்து நிலையத்தின் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த தீ விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
சேலம் சொகுசு பேருந்தில் திடீர் தீ விபத்து தீ விபத்து குறித்து சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு