கரூர்: கரூர் மாநகராட்சியில் உள்ள கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் நேற்றிரவு (ஏப்.8) வழக்கம் போல விற்பனை நிலையம் நிலையம் பூட்டப்பட்டு இருந்தது.
அப்போது, சுமார் இரவு 11 மணி அளவில் திடீரென விற்பனை நிலையத்தில் இருந்து புகை வர தொடங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள் கரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
பஜாஜ் இரு சக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து! இது குறித்து கேள்விப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. வீரர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயை நான்கு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்நிறுவனத்தில் புதிய வாகனங்கள் மற்றும் பழைய இரு சக்கர வாகனங்கள் என 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாயின. மொத்தமாக இதனுடைய மதிப்பு சுமார் 2 கோடி அளவுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையும் படிங்க:காருக்குள் உயிருடன் எரிந்த 4 உயிர்கள்!