தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறையான சிகிச்சை அளிக்காத சேலம் அரசு மருத்துவமனை - கோமா நிலைக்குச் சென்ற சிறுவன்!

சேலம் : அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் கோமா நிலைக்குச் சென்றதாக,  பெற்றோர்கள் உயிருக்குப் போராடும் குழந்தையை கையில் எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

fever issue

By

Published : Nov 4, 2019, 10:18 PM IST

சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன், மைதிலி தம்பதியர்களின் மகன் ஹரிகுகன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் சிறுவனை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் வலிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மருத்துவமனையில் அடிக்கடி ஊசி போட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்ததால், சிறுவனை பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு காய்ச்சல் குணமாகியதாகக் கூறினர். ஆனால், ஆரம்ப கட்டத்தில் முறையான சிகிச்சை எடுக்காததால், குழந்தை கோமா நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த பெற்றோர்கள் மகனை வேறு வழியின்றி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

கண்ணீர் மல்க பேசிய சிறுவனின் தாய்

தன்னுடைய மகனின் இந்த நிலைமை அறிந்து பெற்றோர்கள் எப்படியாவது தன் மகனை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு இடங்களில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதற்குப் பொருளாதாரம் ஒரு பெரிய தடையாக இருந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பெற்றோர்கள் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கண்ணீர் மல்கப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தன் மகனைக் காப்பாற்ற வேண்டுமென்றும், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் தன் மகனுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டதாகவும் கூறி கதறி அழுதனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்ற சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் வேறு மருத்துவமனையில் வைத்து, தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பாற்று மாறும், தங்களால் முடிந்தவர்கள் பொருளாதார உதவி செய்யுமாறும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:
நள்ளிரவில் வாலிபர் அடித்துக்கொலை: முகம் சிதைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details