தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர்கள் ஃபெனிக்ஸ், ஜெயராஜ் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் நேற்று(ஜூன் 24) செல்போன் கடை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர் .
தந்தை, மகன் உயிரிழப்பு - உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய செல்போன் கடை உரிமையாளர்கள்! - உறுவப்படத்திற்கு அஞ்சலி
சேலம்: சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர்கள் ஃபெனிக்ஸ், ஜெயராஜ் உருவப்படத்திற்கு செல்போன் கடை உரிமையாளர் சங்கத்தினர் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள மொபைல் விற்பனை வணிக வளாகம் முன்பு, சேலத்தைச் சேர்ந்த மொபைல் செல்போன் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒன்று திரண்டு ஃபெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்த்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பேசிய தமிழ்நாடு மொபைல் போன் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம் கூறுகையில்,"எதிர்பாராத மரணம் இது. சிறிய வியாபாரிகளை காவல் துறை கொடுமைப்படுத்தி கொலை செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.