தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - Farmers association

சேலம் : இன்று (ஆக.10) விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்

By

Published : Aug 10, 2020, 5:10 PM IST

Updated : Aug 10, 2020, 5:21 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மத்திய, மாநில அரசுகள் கரோனா பொது முடக்க காலத்தில் விவசாயிகளுக்கு மாதம்தோறும் 7,500 ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளை வாட்டி வதைக்க கொண்டுவரப்பட்டுள்ள மின் திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் ரவீந்திரன், "ஊரடங்கால் விவசாயிகளும், பொது மக்களும் கடும் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி வழங்கிட வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு மாதம்தோறும் 7,500 ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

மேலும் விவசாயிகளை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மின் திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

Last Updated : Aug 10, 2020, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details