சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகேயுள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மணி (50). இவர் தனது வீட்டருகே நேற்று (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்தபோது, திடீரென வெடித்து சிதறியது. இதில், பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரேடியோ பெட்டி வெடித்தபோது அருகிலிருந்த 12 வயது சிறுமி செளரூபியா மற்றும் வசந்த குமார் (37), நடேசன் (67) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.