சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தியம்பட்டியில் ஆனந்தன் என்ற விவசாயிக்குச் சொந்தமான இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல்துறையினர், விவசாயி ஆனந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.
இதுகுறித்து விவசாயி கூறுகையில், தனது விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதால், தன்னுடைய நிலத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை. உரிய இழப்பீடு வழங்கி தனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே தனது நிலத்தை உயர் மின் கோபுரம் அமைக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், இழப்பீடு பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
இதையும் படிங்க: சிறுமியினை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்கச் சொல்லி போராடிய மக்கள்