தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்று சமூக பெண்ணுடன் திருமணம் - மகனை கடத்தி தாக்கி மொட்டை அடித்த குடும்பத்தினர் - சேலம் மாற்று சமூக பெண்ணுடன் திருமணம்

சேலம் : வாழப்பாடி அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரை கடத்திச் சென்று மொட்டை அடித்து தாக்கி கொடுமைப்படுத்திய பெற்றோர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

family-kidnaps-son-and-assaults-him
family-kidnaps-son-and-assaults-him

By

Published : Sep 26, 2020, 12:37 PM IST

வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அருள்குமார்(25) . கூலி தொழிலாளியான இவரும் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியுடன் அருள்குமார் நெருங்கிப் பழகியதால் அவர் கர்ப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து இரண்டு பேரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு அருள்குமாரும் 17 வயது சிறுமியும் எங்கு வசிக்கிறார்கள் என்று தெரியாமல் இரண்டு தரப்பினரும் தேடி வந்துள்ளனர்.

பின்னர் அருள்குமாரின் தாயார் தனது மகன் மைனர் பெண்ணை கடத்தி சென்று விட்டதாக வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான காதல் ஜோடியை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அருள்குமாரின் குடும்பத்தினர் பள்ளிபாளையம் சென்று அருள்குமாரை அடித்து உதைத்து காரில் கடத்தி வந்து சொந்த ஊரான சின்னமநாயக்கன்பாளையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை அறையில் அடைத்து வைத்து தென்னை மட்டைகள் கொண்டு கொடூரமாக தாக்கி மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

எட்டு மாத கர்ப்பிணியான அருள்குமாரின் மனைவி சிறுமி அளித்த தகவலின் பேரில் வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான காவல் துறையினர் அருள்குமாரை அவரின் பெற்றோரிடம் இருந்து மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‌இதுதொடர்பாக விசாரணை நடத்திய வாழப்பாடி காவல் துறையினர் அருள்குமாரை மொட்டை அடித்து கொடூரமாக தாக்கியதற்காக தாயார் அபிலா, சகோதரர்கள் நேரு, வெங்கடேசன், சகோதரி, சித்தப்பா மணிகண்டன், ரகுநாதன் ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார், காரை ஓட்டிச்சென்ற டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே அருள்குமாரின் தாயார் வாழப்பாடி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்ட அருள்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details