தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆதார் கார்டு மூலம் பணம் மோசடி - உஷாரா இருங்க மக்களே! - மக்களை அறிவுறுத்திய சேலம் காவல்துறை

சேலம்: போலி ஆதார் அட்டை மற்றும் பேன் கார்டு தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஏழு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

Adhar theft
Adhar theft

By

Published : Dec 14, 2019, 5:10 PM IST

சேலத்தில் தவணை முறையில் பொருட்கள் வாங்கும் டிவி ஷோ ரூம், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளில் நூதன முறையில் ஆதார் மற்றும் பேன் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை கடனாகப் பெற்று சிலர் ஏமாற்றி வருவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாருக்கு புகார் வந்தது.

திருடர்களை பிடித்த காவல்துறை

அதனடிப்படையில் சேலம் மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையாளர் செந்தில், உதவி ஆணையாளர் செல்வராஜ், பூபதி ராஜன் மற்றும் அழகாபுரம் காவல் ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை அழகாபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த ஏழு பேரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், ஏழுபேரும் கணினி வைத்து நூதன முறையில் போலியான ஆதார் கார்டுகள் தயாரித்துள்ளனர். அதன் மூலம் துணிக்கடை ஷோ ரூம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய கடைகளில் தவணை முறையில் பொருட்களை கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், வரதராஜ பெருமாள், பன்னீர்செல்வம், அருண், ராமு, சரவணகுமார் மற்றும் மதுபாலன் ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் போலி கார்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் போலி ஆதார் அட்டைகள், பேன் கார்டு, சொகுசு கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் செந்தில் கூறுகையில், "பொது மக்கள் தங்களது வங்கி எண், ஆதார் எண் மற்றும் கிரெடிட் கார்டு எண்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் தினமும் மூழ்குகிறது' - ப. சிதம்பரம் வேதனை

ABOUT THE AUTHOR

...view details