சேலம்: மேட்டூர் அடுத்த அச்சங்காட்டில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், சட்டவிரோதமாக ஜெலட்டின் மற்றும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் பயன்படுத்தி வருவதாகவும், ஏராளமான அளவில் பதுக்கி வைத்திருப்பதாகவும், கொளத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று (ஆகஸ்ட் 25), உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் கல்குவாரியில் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில், 1086 ஜெலட்டின் குச்சி மற்றும் டெட்டனேட்டர்கள் 300 எலக்ட்ரிக்கல் டெட்டனட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
இந்த கல்குவாரியில் வெடி பொருள் வைக்க அனுமதி இல்லாத நிலையில், அதிக அளவில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் குவாரி உரிமையாளர் வினோத் மீது கொளத்தூர் காவல்துறையினர்,வெடி மருந்து தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையடுத்து வெடி பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், உரிய அனுமதி பெறாத கல் குவாரிக்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார் என்று குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கனல் கண்ணன் ஜாமின் மனு தள்ளுபடி - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு