தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதிர்க்கட்சி தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் அடைந்த தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக கேட்டறிந்தார்.

எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சி தலைவர்

By

Published : May 3, 2021, 4:49 PM IST

சேலம்: அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரின் இல்லத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் உடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பாமக எம்எல்ஏக்கள் இரா. அருள், சதாசிவம் ஆகியோரும் உள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி!
இந்த சந்திப்பு குறித்து சேலம் மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ”நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வி, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றி ஆகியவை குறித்து இதில் விரிவாக பேசப்பட்டது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் அடைந்த தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக கேட்டறிந்தார்.அடுத்தகட்டமாக அதிமுகவில் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்தும், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது குறித்தும் பேசப்பட்டது என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details