சேலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் போக்குவரத்து துறை பிரிவினரின் மாநில அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'அரசுப் போக்குவரத்து துறையில் உள்ள நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக கண்காணிப்பாளர் பணியிடங்களில் சரி பாதி அளவு காலிப்பணியிடங்கள் உள்ளன' என்றார்.