சேலம் மாவட்டம் கொளத்தூர் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால், இங்கு யானைகள் நடமாட்டம் அதிகம். வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீர், உணவு தேடி மலை அடிவாரத்திலுள்ள ஊருக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்று. அப்படி வரும் யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்துவதால், கொளத்தூர் விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்தும், அகழிகள் வெட்டியும் வைக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆண் யானை ஒன்று தண்ணீர் தேடி கிமியான் பகுதிக்கு வந்துள்ளது. அங்கு வந்த யானை தங்கவேல் என்பவரின் விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.