தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'8 மணிக்கு மேல் தபால் வாக்குகள் ஏற்கப்படாது' - ஆட்சியர் ரோகினி - செய்தியாளர் சந்திப்பு

சேலம்: "நாளை காலை 8 மணிவரை தபால் வாக்குகள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் தபால் வாக்குகள் ஏற்கப்பட மாட்டாது" என்று, ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் ரோகிணி

By

Published : May 22, 2019, 7:11 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம் ஆட்சியர் ரோகிணி

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "குறிப்பிட்ட நேரத்திற்குள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரவேண்டும். செல்போன், பேனா உள்பட எந்த பொருளும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. குறைந்தது 20 சுற்றுகளும், அதிக பட்சம் 25 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 6 சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பின்னரே அந்த சுற்றுக்கான முடிவு அறிவிக்கப்படும். இதுவரை 6,300 தபால் வாக்குகள் வரப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிவரை தபால் வாக்குகள் பெறப்படும். 8 மணிக்கு பிறகு வரும் தபால் வாக்குகள் ஏற்கப்பட மாட்டாது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஊடகவியலாளர்கள் செல்போன் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details