ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன், இளமதி ஆகியோர் கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இளமதியின் குடும்பத்தினர் அன்றைய தினம் இரவு செல்வன், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஈஸ்வர் ஆகியோரை தாக்கிவிட்டு இளமதி அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக செல்வன், ஈஸ்வர் ஆகிய இருவரும் கொளத்தூர் காவல் நிலையத்தில் இளமதியைக் கடத்திச் சென்றதாகப் புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளமதியின் தந்தை உள்பட 18 பேரைக் கைது செய்தனர். இதனிடையே கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இளமதி கடந்த 14ஆம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.