சேலம்நெடுஞ்சாலை நகரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ' இன்று(அக்.5) அய்யாதுரை பாண்டியன் தலைமையில் பத்தாயிரம் பேர் அதிமுகவில் இணைவதற்கு முன்னோட்டமாக 100க்கும் மேற்பட்டோர் எனது முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதில் உச்ச நீதிமன்றம் எந்த தடை உத்தரவையும் போடவில்லை. ஊடகங்கள், பத்திரிகைகள் தான் தவறாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது.
சில பேர் மேல்முறையீடு செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை கேட்டுள்ளனர். அதற்கு எங்களது வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி 95% விழுக்காடு அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் கூடாது.
அதற்கு நாங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளோம்’ என்று கூறினார்.