சேலம்:ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு என மொத்தம் சுமார் ரூ.4 கோடியே 74 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதன்படி,ஆத்தூர் ஒன்றியத்தில் துலுக்கனூர் ஊராட்சி இந்திரா நகரில் ரூ.9.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம். தென்னங்குடிபாளையம் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம், அரசநத்தம் ஊராட்சி, ஊராண்டிவலசு மற்றும் கோவிந்தராஜாபாளையத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சீர்மிகு வகுப்பறை. அரசநத்தம் ஊராட்சி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி.
தென்னங்குடிபாளையம் ஊராட்சி, தாண்டவராயபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சீர்மிகு வகுப்பறை, அம்மம்பாளையம் ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி, வலையமாதேவி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, கல்பகனூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் உள்ள 8வது வார்டில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம்.
ஏத்தாப்பூர் நடுநிலைப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சீர்மிகு வகுப்பறை, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் பணி மற்றும் ஆத்தூர் நகராட்சியில் 23வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா தெருவில் சிறுபாலம் மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைத்தல். 11வது வார்டில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பகிர்மான குழாய்கள் அமைத்தல்.
கிழக்கு மாதா கோயில் தெருவிற்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், 12வது வார்டில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் சிவகுரு தெருவில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் மற்றும் புதிய ஆழ்துளைக்கிணறு அமைத்தல். ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறு மற்றும் மின் மோட்டார் அமைத்தல்.