தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, நிலம், நீர் ஆகியவை மாசு அடைவதைத் தடுக்கும் வகையிலும், கால்நடை உயிரினங்களைக் காப்பாற்றும் நோக்கிலும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று எடப்பாடி பேருந்து நிலையத்தில் தூய்மை பாரதம் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக எடப்பாடி நகராட்சி சார்பில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.