சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் தேவைக்கேற்ப எடப்பாடி அரசு மருத்துவமனை பல்வேறு அதிநவீன சிகிச்சை கருவிகளைக் கொண்டு, தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு பல்வேறு சிக்கல்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மருத்துவமனையில் பொதுமுடக்க காலத்தில், அதாவது கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதுவரை 145 நோயாளிக்கு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது முழு மூட்டு மாற்று இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் பாலாஜி, தலைமை மருத்துவர் சரவணக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள அரசு மருத்துவர்கள் இமாம், செந்தில் இருசப்பன், ஜெயக்குமார், செவிலியருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை!