தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னைப்பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை: ஸ்டாலின் கொதிப்பு! - சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் இணையவழி பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

edapadi-palanisamy-dont-have-anything-to-talk-about-me-dmk-stalin
edapadi-palanisamy-dont-have-anything-to-talk-about-me-dmk-stalin

By

Published : Nov 22, 2020, 6:55 AM IST

திமுக சார்பில் சேலத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் இணையவழி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வின் சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 580 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பின்னர் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி. இந்த விவகாரத்தில், திமுக தொடர்ந்து அரசியல் செய்ததாலேயே இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என முன்பே சொல்லாதது ஏன்? செய்யும் தவறுகளில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள முதலமைச்சர் தன்னை விவசாயி என கூறிக்கொண்டால் அதை வெளிப்படுத்த வேண்டிய கடமை திமுகவுக்கு உண்டு.

தமிழகம் மீட்போம் இணையவழி பொதுக்கூட்டம்

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாயிலாக உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த அறிக்கைகளுக்கு பின்னர்தான் அரசின் அறிவிப்புகள் வருகிறது.

முன்பெல்லாம் ஆற்றில் இருந்து மண் எடுத்தால் கொள்ளை என்பார்கள். ஆனால் தற்போது குடிமராமத்து என்ற பெயரில் மாபெரும் மணல் கொள்ளை நடக்கிறது.

அரசியலுக்கும், சசிகலா குடும்பத்திற்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அவருக்கு வாய் சுத்தமும் இல்லை, கை சுத்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி படிப்படியாக முன்னேறினாரா அல்லது தரையில் தவழ்ந்து தவழ்ந்து முன்னேறினாரா என்பது தமிழ்நாடு மக்களுக்கு நன்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பேரவைத் தேர்தல் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் - அதிமுக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details