தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் பாடப்பொருள்கள் தயாரிப்புப் பணிமனை தொடக்கம்! - சேலத்தில் மின் பாடப்பொருட்கள் தயாரிப்பு பணிமனை துவக்கம்

சேலம் : அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்குத் தனித்துவ ஆர்வ குறிப்பொலி, தந்திரோபாய மின் பாடப்பொருள்கள் தயாரிப்புப் பணிமனை சேலம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.

மின் பாடப்பொருட்கள் தயாரிப்பு பணிமனை துவக்கம்!
மின் பாடப்பொருட்கள் தயாரிப்பு பணிமனை துவக்கம்!

By

Published : Mar 4, 2021, 2:46 PM IST

மாணவர்களின் பாடப்புத்தகங்களில் உள்ள பகுதிகளை வலுப்படுத்தியும், பல் ஊடகங்களைப் பொருத்தியும், கற்பித்தல் சார்ந்த யுக்திகள், எளிதான கற்றலுக்கு உதவிடும் வகையிலும், பாடங்களை மின் பாடப் பொருளாக மாற்றும் பணிமனை சேலம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.

கற்போரிடையே அறிவுசார் வளர்ச்சிக்கும், உடல் உள்ள செயல்பாடுகளைத் தூண்டும்வகையில் மின் பாடப்பொருள்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மின் பாடப்பொருள்கள் தயாரிப்புப் பணிமனை தொடக்கம்!

இதனால் ’தெரிந்து, கற்றுக் கொண்டேன்’ என்ற ஆர்வக் குறிப்பொலியைக் கொண்டு மாணவர்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில், 'தனித்துவ ஆர்வ குறிப்பொலி, தந்திரோபாய மின் பாடப்பொருள்கள்' தயாரிப்பு நடைபெறுவதாக நிறுவன இயக்குநர் முனைவர் செல்வம் தெரிவித்தார்.

தயார்செய்யப்படும் மின் பாடப்பொருள்கள் டிஜிட்டல் லேர்னிங் பிளாட்ஃபார்ம் (Digital learning Platform) எனப்படும் இணையவழிச் சேவையில் பதிவேற்றம்செய்யப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பணிமனையில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கோடான கோடி 'ஹலோ'க்களுக்கு காரணமான கிரஹாம் பெல்லை நினைவுகூர்வோம்...

ABOUT THE AUTHOR

...view details