தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏற்காடு தலைச்சோலை கிராமம் போதைப்பொருள் இல்லாத கிராமமாக அறிவிப்பு - போதைப் பொருள் பயன்பாடு குறித்த ஆய்வுகள்

ஏற்காடு தலைச்சோலை கிராமத்தை போதைப்பொருள் இல்லாத கிராமம் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அறிவித்துள்ளார்.

Etv Bharatஏற்காட்டில் போதை பொருள் இல்லாத கிராமம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்
Etv Bharatஏற்காட்டில் போதை பொருள் இல்லாத கிராமம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்

By

Published : Oct 13, 2022, 10:37 AM IST

சேலம்:போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தலைச்சோலை கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் கடந்த சில தினங்களாக போதைப்பொருள் பயன்பாடு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் கஞ்சா உள்ளிட்ட எந்த ஒரு போதைப்பொருட்களும் இப்பகுதியில் பயன்படுத்துவது இல்லை அல்லது விற்பனை செய்யப்படுவது இல்லை என்று முழுமையாக ஆய்வில் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த கிராமத்திற்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மற்றும் டிஎஸ்பி தையல்நாயகி உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் சென்று மக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு இல்லாத கிராமம் என்று அறிவிப்புப் பலகை வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறுகையில், ‘முதல்முறையாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், ஏற்காடு தலைச்சோலை கிராமத்திலும் காவல்துறை சார்பில் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்காட்டில் போதைப்பொருள் இல்லாத கிராமம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்

அதில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு இல்லாத கிராமமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை எடுத்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து இப்பகுதியில் அறிவிப்புப் பலகையும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; மேலும் மலைவாழ் மக்கள் இந்த கிராமங்களைச் சுற்றி உள்ளவர்கள் யாரேனும் போதைப் பொருட்கள் விற்க முற்பட்டால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க:மலைக்குறவர் சமூகத்தைச்சேர்ந்தவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details