சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்காவுக்கு உட்பட்ட கொங்குபட்டி ஊராட்சியில் மலைக் குன்றுகளால் சூழப்பட்ட 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில், பெரியகும்பானூர், தோப்புக்காடு, ஏரிக்காடு உள்ளிட்ட மூன்று குக்கிராம மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குன்றுகளின் மேல் ஏறி கீழே இறங்கி சென்று தண்ணீர் எடுத்து மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக அக்கிராம மக்கள் அரசுக்கு குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த மூன்று கிராமங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார். அதன்படி, மூன்று கிராமங்களுக்கும் இன்று தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.