தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடியோ: "பார்" ஆக மாறிய சேலம் ரயில்வே நடைபாதை - drinkers railway corridor into a drinking place

சேலத்தில் ரயில்வே நடைபாதையை மது அருந்தும் இடமாக மாற்றிய மது பிரியர்களின் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

"பார்" ஆக மாறிய சேலம் ரயில்வே நடைபாதை
"பார்" ஆக மாறிய சேலம் ரயில்வே நடைபாதை

By

Published : Jan 20, 2023, 12:55 PM IST

வைரல் வீடியோ

சேலம் மாவட்ட ரயில் நிலையம் வழியாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சேலம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான இந்த ரயில்வே ஜங்ஷனில் அண்மைக்காலமாக மது அருந்தும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் ஜங்ஷன் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யும் மது பிரியர்கள், வெட்ட வெளியில் அங்கேயே அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் ரயில் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண் பயணிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத அளவுக்கு மது பிரியர்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடைபாதையில் மது அருந்தும் நபர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை காணும் உள்ளூர் மக்கள் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மது பிரியர்களின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பட்டியலின மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றவர் ஸ்டாலின்: அமைச்சர் மதிவேந்தன்

ABOUT THE AUTHOR

...view details