தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2019, 11:49 AM IST

ETV Bharat / state

ஆறு போல் காட்சியளிக்கும் கழிவுநீர்: மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்

சேலம் : கோர்ட் ரோடு பிரதான சாலையில் கழிவுநீர் வெளியேறி ஆறு போல் காட்சியளிக்கிறது. இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டிவருகின்றது.

கழிவுநீரால் ஆறுபோல் காட்சியளிக்கும் சாலை

சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ள கோர்ட் ரோடு பிரதான சாலையில் கழிவுநீர் முழுவதும் பிரதான சாலையில் வெளியேறி அந்தப் பகுதி முழுவதும் ஆறு போல் காட்சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவருகிறது.

கழிவுநீரால் ஆறுபோல் காட்சியளிக்கும் சாலை

தமிழ்நாடு அரசு சென்ற மாதம் சேலம் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்து ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கியது. மேலும், ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் சாக்கடை நீர் வெளியே செல்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கழிவுநீர் முழுவதும் வீட்டிற்குள் வருவதால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளதாகவும் அலுவலர்கள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : பிளாஸ்டிக் இல்லா மாநகரமாகும் முயற்சியில் சேலம்..!

ABOUT THE AUTHOR

...view details