தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு: மோசடி செய்தவர் கைது

By

Published : Jul 24, 2020, 4:12 PM IST

சேலம்: ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்குமென மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

சேலம் காரியப்பட்டி பகுதியை சேர்ந்த சிவசக்தி அவரது நண்பர்களான வீரப்பன், ராஜ்குமார், சுகுந்தகுமார் ஆகியோர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் சேலம் அய்யந்திருமாளிகையை சேர்ந்த சுகவனம் (45) என்பவர் தன்னிடம் பணம் முதலீடு செய்தால், ஆன்லைன் வியாபாரம் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தங்களிடமிருந்து ஒரு கோடியே 69 லட்சம் பணத்தை பெற்றார். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகார் பற்றி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுகவனம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பண இரட்டிப்பு மோசடியில் பலரிடம் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சிவசக்தி உள்ளிட்ட நான்கு பேரிடமும் ரூ.1.69 கோடி மோசடி செய்ததாக சுகவனம், அவரின் தந்தை சுப்ரமணியன், தாய் கண்ணம்மா, மனைவி நித்யா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்
இதைத்தொடர்ந்து சுகவனத்தை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைமான சுகவனத்தின் தந்தை, தாய் மற்றும் மனைவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்தப் பண மோசடியில் சுகவனத்துடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details