தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுர விநியோகம் - துண்டு பிரசுர விநியோகம்

சேலம்: ஓமலூர் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுர விநியோகம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

dmk starts signature campaign in omalu
dmk starts signature campaign in omalu

By

Published : Feb 3, 2020, 7:53 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள், சாலை மறியல்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களைத் திரும்ப பெறவேண்டும் என்று பதிவிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

துண்டு பிரசுர விநியோகம்

இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: ‘சிஏஏ சல்லடைப் போன்றது’ - கனிமொழி எம்பி

ABOUT THE AUTHOR

...view details