தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி - eps vs senthil balaji

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி திமுகவின் ஊழலை வெளியே சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 1, 2023, 7:59 AM IST

Updated : Jul 1, 2023, 9:34 AM IST

சேலம்: எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாதாபுரம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது அதிமுக பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்கள் உயர்ந்துள்ளார்கள் என்றால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்

தான் காரணம். அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. இதனால் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்ந்தது.

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கல்லூரிகளை திறந்ததால் கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. குறிப்பாக, உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் ஏழைகளுக்காக நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்துவதுதான் திமுகவின் சாதனை.

தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் லஞ்சம் முறைகேடுகள் உச்சத்திற்கு சென்று விட்டன. மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இப்படி ஒரு கோடி மதுபாட்டில்கள் வீதம், ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் என விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கிறார்கள். 24 மணி நேரம் மதுபானக் கடைகள் மது விற்பனை செய்து கொள்ளலாம். முறைகேடாக மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வரும் பணம் தலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் வளம் பெறத்தான் 8 கோடி மக்கள் உழைத்துக் கொண்டுள்ளார்கள். தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை பார்த்து திமுகவினர் பயந்து, முடங்கி நடுங்கி உள்ளார்கள்.

அவர் வாய் திறந்துவிட்டால் திமுக ஆட்சி உடனே கவிழ்ந்து விடும் என்ற பயத்தில்தான், அவரைத் தேடி அனைவரும் ஓடிக் கொண்டுள்ளனர். திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகத்தான் மக்கள் பார்த்து வருகிறார்கள். தேசிய அளவில் 140 விருதுகளை தமிழ்நாடு மாநிலம் பெற்றது அதிமுக ஆட்சியில்தான். திமுக ஆட்சியில் எந்தவி த விருதுகளும் பெறவில்லை.

அந்த அளவுக்கு அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டது. அரசாங்கத்தைப் பற்றி கவலைப்படாத தமிழ்நாடு முதலமைச்சர், பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்தியாவிற்கே ஊழல் செய்வதில் வழிகாட்டியாக உள்ளது திமுக ஆட்சிதான். திமுக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன அரச பரம்பரையா?

கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், அவருக்குப் பிறகு பிறகு உதயநிதி என்று சாசனம் எழுதி வைக்கப்பட்டுள்ளதா? ஏழை மக்கள், விவசாயிகள் முதலமைச்சர் பதவிக்கு வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதுபோல நேராக வந்து, திமுக தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

ஒவ்வொரு நிலையாக கிளைச் செயலாளர் பதவியில் தொடங்கி படிப்படியாக உழைத்து, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு நான் வந்துள்ளேன். மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டாலும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கவலையில்லை. திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும், இன்பநிதி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறுகிறார்கள். எதற்கு என்றால், அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளார்கள். அதனால் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்' என கூறினார்.

இந்த நிகழ்வில் அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி - 236 பேர் கைது

Last Updated : Jul 1, 2023, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details