தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் முன்பு பேனர் வைத்ததை தட்டிக்கேட்ட பாதுகாவலர் மீது தாக்குதல் - திமுக துணை செயலாளர் மீது வழக்குப்பதிவு! - DMK party members attacked temple security

சேலம்: கோயில் முன்பு எல்இடி பேனர் வைத்ததை தட்டிக்கேட்ட பாதுகாவலரை தாக்கிய விவகாரத்தில், திமுக மாநகர துணை செயலாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

salem
salem

By

Published : Jan 18, 2021, 4:39 PM IST

தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.18) மாலை சேலம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

ஸ்டாலினை வரவேற்கும் விதமாக சேலம் அன்னதானப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஸ்டாலின், கருணாநிதி உருவம் பதித்த எல்இடி பேனர் போர்டை திமுக சேலம் மாநகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ் வைத்துள்ளார்.

இதனை அறிந்த திருக்கோயில் பாதுகாவலர் சிகாமணி, கோயில் அருகில் பேனர் வைக்கக் கூடாது, பேனரை எடுக்கும்படி திமுகவினரிடம் கூறியுள்ளார். ஆனால் பேனரை அகற்ற மறுத்த அக்கட்சியினர், எதிர்ப்பு தெரிவித்த சிகாமணியை தாக்கியதாக கூறப்படுகிறது.

பாதுகாவலர் சிகாமணி கொடுத்த விளக்கம்

பின்னர் பாதுகாவலர் சிகாமணி சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த காவல் துறையினர், கிருஷ்ணராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காதல் மலர்ந்து கைகூடா நிலையில் அரசியலில் ஓய்வெடுக்க உதயநிதி வந்துள்ளார்- ஆர் பி உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details