தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

சேலம்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் வழங்கினார்.

dmk
dmk

By

Published : Mar 2, 2020, 10:18 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சேலம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிறந்த 26 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் வெள்ளி கொலுசு, உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளிக் கொலுசை பரிசாக பெற்ற தாய்மார்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் 10 ஆண் குழந்தைகள், 16 பெண் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் மதிப்பிலான தங்க மோதிரம், பெண் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசுகளை வழங்கி பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பெற்றோருக்கு உணவு பொருட்களை வழங்கிய திமுகவினர்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்டாலின் பிறந்த நாளை சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரு மாதம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடவுள்ளோம். நேற்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’0.1% கோயில் நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்’ - நீதிமன்றத்தில் அரசு தகவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details