சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன். இவரது இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனி விமானம் மூலம் சேலம் வந்தார்.
தனி விமானம் மூலம் ஸ்டாலின் சேலம் வருகை! - DMK
சேலம்: ரிஷிவந்தியம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் இல்லத் திருமண விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று சேலம் வந்தார்.
![தனி விமானம் மூலம் ஸ்டாலின் சேலம் வருகை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2473178-1055-706f6063-6d0c-402a-92a7-772ee4e1f28c.jpg)
மதுரையிலிருந்து சேலத்துக்கு இன்று காலை 8.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்ட ஸ்டாலின், காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 09.20 மணிக்கு வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஸ்டாலினுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் சிறிது நேரம் பேசியதையடுத்து, கார் மூலம் ரிஷிவந்தியத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற அவர் மணமக்களை வாழ்த்தினார்.