சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் அந்த திட்டத்தை ஆதரித்து திமுக மூத்த வழக்கறிஞர் பி.வி.வில்சன் ஆஜரானார் என்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் நேற்று முன் தினம் கூறி இருந்தார்.
அன்புமணி ராமதாஸுக்கு திமுக நோட்டீஸ் - எட்டு வழிச் சாலை
சேலம்: எட்டு வழிச்சாலைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 2ஆம் தேதி வெளியானது. இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசியபோது திமுகவை பற்றி அவதூற பரப்பியதாகக் கூறி, திமுக சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸுக்கு திமுக நோட்டிஸ்
இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வழக்கறிஞர்கள் கிரிராஜன், நீலகண்டன் ஆகியோர் வில்சன் சார்பாக அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அன்புமணி தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்றும், மேலும் இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று கூறி அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.