டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன் தினம் (ஜன. 06) மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முகமூடி அணிந்த 100க்கும் மேற்பட்டோர், ஆசிரியர்கள், மாணவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து இந்திய மாணவர்கள் இரவு முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேரு பல்கலைகழக மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.