திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் சேலம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தருண் நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கும்படி எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்தார் .