சேலம்: சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற காசாளர் அய்யம்பெருமாள் தலைமையில் சமுத்திரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த திமுகவினர் 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அதேபோல் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சேலம் புறநகர் மாவட்டம் அம்மா பேரவை முன்னாள் செயலாளர் காங்கேயன் ஏற்பாட்டில் ஆரூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கணக்குபட்டி திமுக கிளை அவைத் தலைவர் சண்முகம் தலைமையில் நாகிரெட்டியூர், வெள்ளகரட்டூர், கணக்குபட்டி மற்றும் கோழிகாட்டானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 பேர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கொங்கணாபுரம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி உடன் ஆகியோர் உடன் இருந்தனர்.