சேலம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ஐந்து ரோடு சந்திப்பில் ரூ. 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் புதிய ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி. பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் பங்கேற்ற பாலம் திறப்பு விழாவில் அதிமுக - திமுக இடையே மோதல் - அதிமுக - திமுக இடையே மோதல்
சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற, புதிய இரண்டடுக்கு மேம்பாலம் திறக்கும் நிகழ்ச்சியின்போது அதிமுக - திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக இன்று காலை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திரண்டிருந்தனர். திமுக எம்.பி.யின் வருகையையொட்டி திமுக தொண்டர்களும் அங்கு வந்திருந்தனர்.
அப்போது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு முன்பாக திமுக தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் படத்தை காண்பித்தனர். இதைக்கண்ட அதிமுக நிர்வாகிகள், உள்ளிட்ட அக்கட்சியின் தீவிர தொண்டர்கள் திமுகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விழா நடைபெறவிருந்த மேடை அருகே சலசலப்பு ஏற்பட்டது.