சேலம் புறநகர் மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் தேமுதிக தலைமை அலுவலகம் திறப்பு விழா சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபாஸ்கரன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேமுதிக நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறேன். தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதை பார்க்க முடிகிறது.
அத்திவரதர் போல் கேப்டன் வருவார்: விஜயகாந்த் மகன் பேட்டி
சேலம்: அத்திவரதர் போல் சரியான நேரத்தில் விஜயகாந்த் வருவார் என்று அவரது மகன் விஜயபாஸ்கரன் கூறியுள்ளார்.
salem dmdk office opening vijayakanth
விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். அத்திவரதர் போல் சரியான நேரத்தில் வருவர். வரும்போது தமிழ்நாட்டில் பிரளயம் ஏற்படும். தமிழ்நாடு அரசு முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உதவிகளை இன்னும் விரைவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை பார்வையிட இருக்கிறேன்." என்று அவர் கூறினார்.