தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி அறிமுகம் செய்து இருபது வருடங்கள் முடிந்து 21ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனையொட்டி நேற்று தமிழ்நாடு முழுவதும் தேமுதிகவினர் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சேலத்தில் தேமுதிக கொடி நாள் கொண்டாட்டம்! - சேலத்தில் தேமுதிக கொடி நாள் கொண்டாட்டம்
சேலம்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி அறிமுகமான நாளை முன்னிட்டு நேற்று சேலத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அக்கட்சியினர் கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
சேலத்தில் தேமுதிக கொடி நாள் கொண்டாட்டம்!
அதனடிப்படையில் சேலம் மாவட்டம் சார்பாக கொடி நாளை முன்னிட்டு சேலம் கிச்சிப்பாளையம் பகுதிக்குட்பட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க...பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்