சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரி நீரை ரூ.565.00 கோடி மதிப்பீட்டில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நீர் வழங்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த சேலம் ஆட்சியர் - நீர் வழங்கும் திட்டம்
சேலம்: மேட்டூர் அணையின் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Breaking News
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் வி. சரவணன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆர். கௌதமன், உதவி பொறியாளர் ஆர்.வேதநாராயணன், மேட்டூர் வட்டாட்சியர் ஜி.சுமதி உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்
.