தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் நுண்ணுயிர் கலவை தெளிப்பு - ஆட்சியர் ஆய்வு!

சேலம்: மேட்டூர் அணையின் கோட்டையூர், பண்ணவாடி, காவேரிபுரம் உள்ளிட்ட நீர்த்தேக்கப் பகுதிகளில் நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Mettur Dam

By

Published : Nov 13, 2019, 9:09 AM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளான கோட்டையூர், பண்ணவாடி, காவேரிபுரம், சேத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்களும் மீனவர்களும் கடும் அவதிக்குள்ளாகிவந்தனர்.

இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் அளிக்கப்பட்டுவந்தது. இந்தப் புகார்களின் பேரில் கோட்டையூர், பண்ணவாடி, காவேரிபுரம், சேத்துக்குளி ஆகிய நீர்த்தேக்கப் பகுதிகளில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் திரவம் தெளிக்கும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்றுவருகிறது.

இப்பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், நாடாளுமன்ற உறுப்பினர் என். சந்திரசேகரன், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் அணை நீர்க்கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் ஹசீன்பானு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர். செல்லதுரை, மேட்டூர் அணையின் மீன்வளத் துறை சார் ஆய்வாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணை மதகுகளில் உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details