சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் உதவி மேலாளராக (தற்காலிக ஊழியர்) பணிபுரிந்துவந்தவர் திலகவதி.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் சேலம் மாவட்டத்தை அடுத்த ஏற்காடு தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவர் விருப்ப மனு அளித்த புகைப்படம் இணையதளங்களில் செய்தியாகப் பரவியதை அடுத்து, இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு துறை ரீதியாக கடிதம் அனுப்பப்பட்டது. அத்துடன், திலகவதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று (மார்ச் 8) சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமன், தேர்தல் நடத்தை விதிமீறல் அடிப்படையில் தலைவாசல் வட்டார வேளாண்மை அலுவலக தொழில்நுட்ப உதவி மேலாளர் திலகவதியை பணிநீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க :ஏமாற்றுவது எப்படி என ஸ்டாலினிடம் தான் கற்க வேண்டும்!