சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் கோட்ட அலுவலகத்தில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்காக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காலையிலேயே வரவழைக்கப்பட்டனர்.
அரசு விழாவில் மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற ஊழியர் உயிரிழப்பு - சேலத்தில் சோகம் - அரசு விழாவில் மயங்கி விழுந்த ஒய்வுப்பெற்ற ஊழியர்
சேலம்: அமைச்சர்கள் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பண பலன்கள் வழங்கும் விழாவில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![அரசு விழாவில் மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற ஊழியர் உயிரிழப்பு - சேலத்தில் சோகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4521186-thumbnail-3x2-cats.jpg)
இதேபோல் தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த மணியும் கலந்துகொண்டார். அப்போது விழா நடந்து கொண்டிருக்கும் போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மணியின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களை மனம் உருக வைத்தது.
இதையும் படிங்க: தேர்தல் விதியை மீறிய அரசு உழியர்கள்: அமைச்சருக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு!