தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் தலைமையில் போலி ஒத்திகை நிகழ்ச்சியும் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
இதில் முன்னதாக ஓமலூர் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்கள் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து போலி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து தீ விபத்து, வெள்ளம், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றுவது குறித்து பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.