சேலம்:மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனத்தின் அளவு- 40% மேல் ) உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மாதம் 3 ஆயிரம் ரூபாயும் 75% ஊனமுற்றவர்களுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் ஆறு மாதங்களாகியும் உயர்த்தி வாங்கப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.