மாற்றுத்திறனாளிகளும் இந்த சமுதாயத்தில் சக மனிதர்களைப் போல, அனைத்து வசதிகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது .
மாற்றுத்திறனாளிகளுக்க பிரெய்லி முறை செல்லிடப்பேசி! - ஆட்சியர் ராமன் வழங்கினார்
சேலம்: பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் பயன்படும் செல்லிடப்பேசியை அம்மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.
![மாற்றுத்திறனாளிகளுக்க பிரெய்லி முறை செல்லிடப்பேசி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4561178-thumbnail-3x2-ct.jpg)
collector raman
மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி
இதில் பார்வைத்திறன் குறைபாடு கொண்ட நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் பயன்படுத்தப்படும் செல்லிடபேசி வழங்கப்பட்டது . இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செல்லிடப்பேசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மடக்கு குச்சி செவித் திறன் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.