தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் யுத்தம் செய்வோம்' - இயக்குநர் கௌதமன் - எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் யுத்தம்

சேலம் : எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற முயற்சித்தால் ஜனநாயக முறைப்படி யுத்தம் நடத்துவோம் என்று இயக்குநரும் தமிழ் பேரரசுக் கட்சி தலைவருமான வ.கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 28, 2020, 3:51 PM IST

எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தாமாக முன்வந்து கைவிடவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டு இயக்கப் பிரதிநிதிகள் நாராயணன், மோகனசுந்தரம், அய்யன்துரை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மோகன், திமுக வீரபாண்டி ராஜா, ரவீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கெளதமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

”சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த வடிவத்தில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் நாங்கள் அதைத் தொடர்ந்து எதிர்ப்போம்.

ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று அனைவரையும் ஒன்றிணைத்து தொடர் போராட்டம் நடத்துவோம். அதையும் மீறி எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற முயற்சித்தால் அதற்கு எதிராக ஜனநாயக முறைப்படி யுத்தம் நடத்துவோம். கைப்பிடி அளவு அல்ல, மூக்குப் பொடி அளவுகூட இந்தச் சாலை திட்டத்திற்காக நிலத்திலிருந்து மண்ணை எடுக்க அனுமதிக்க மாட்டோம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது. மாற்று வழியில் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக கூறுவது தவறு. எதற்காக விவசாயத்தை அழித்துவிட்டு சாலை போட வேண்டும்? நிலத்தைக் கையகப்படுத்த எங்கள் கிராமத்திற்குள் யார் வந்தாலும் இங்கிருந்து வெளியே செல்ல முடியாது.

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க:உயிரே போனாலும் 8 வழிச்சாலைக்கு நிலம் தரமாட்டோம்- விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details